உலகம்

ஐம்பது கோடி பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருட்டு: யாஹூ நிறுவனம் ஒப்புதல்!

புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

DIN

புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற இணைய சேவை நிறுவனங்களில் யாஹூவும் ஒன்று. இந்நிறுவனம் மூலம் பலர் மின்னஞ்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயனப்டுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தில் கணக்கு  வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்ற விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

யாஹூவின் தகவல் சேகரிப்பு மையத்தில் இணைய தகவல் திருடர்கள் செய்த தொழில்நுட்ப திருட்டு ஒன்றை விசாரிக்கும் போதுதான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய பாதுகாப்பபு குறைபாட்டு பிரச்சினையாக கருதப்படும் இதை குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் செய்து இருக்கலாம் என்று யாஹூ கருத்து தெரிவித்துள்ளது. 

திருடப்பட்ட தகவல்களில் பயனாளர்களின் கணக்கை சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் பயனாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள், பிறந்த தேதி, கடவுச் சொற்கள், மற்றும் பாதுகாப்பு கேள்விகள் மற்றும் பதில்கள் ஆகிய விபரங்கள்  அடங்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

SCROLL FOR NEXT