முகப்பு
உலகம்

சிரியாவில் டேங்கர் லாரி குண்டு வெடிப்பு: ஐம்பது பேர் பலி!

சிரியாவின் அலெப்போ மாகாணத்துக்குட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் சனிக்கிழமை அன்று நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

Updated On : 8 ஜனவரி, 2017 at 1:00 PM
பகிர்:

டமாஸ்கஸ்: சிரியாவின் அலெப்போ மாகாணத்துக்குட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் சனிக்கிழமை அன்று நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையில் அலெப்போ மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள பல பகுதிகள்  சிரியாவை சேர்ந்த போராளி குழுக்களின் பிடியில் உள்ளன. அப்பகுதிகளை மீட்பதற்காக துருக்கி விமானப்படையின் துணையுடன் சிரியப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ மாகாணத்திற்குட்பட்ட அஜாஸ் நகர நீதிமன்றம் அருகே  தீவிரவாதிகள் நேற்று நடத்திய டேங்கர் வெடிகுண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். இதனால் பலி எணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.