முகப்பு
உலகம்

லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ

மேற்கு லண்டனில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கட்டடம் முழுவதும் தீ

உலகம்

லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ

மேற்கு லண்டனில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கட்டடம் முழுவதும் தீ

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:45 PM
பகிர்:

லண்டன்: மேற்கு லண்டனில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கட்டடம் முழுவதும் தீ பற்றி எரியும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி கிரீன் பீல் டவர் கட்டடத்தில் இன்று அதிகாலை காலை (உள்ளூர் நேரப்படி) 1.16 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2வது தளத்தில் இருந்து 25வது தளம் வரை தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. 100-க்கும் மேலான குடும்பங்கள் வசித்துவரும் இந்த கட்டடம் 1947 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 40 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

கட்டடம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் 100க்கும் மேலான வீடுகளில் வசித்து வந்தவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →