முகப்பு
உலகம்

கடந்த ஆண்டில் அதிகமாக விற்பனையான ஸ்மார்ட்போன் எது தெரியுமா பாஸ்?

கடந்த ஆண்டு சந்தையில் அதிக அளவு விற்பனையான ஸ்மார்ட்போன் எது என்ற தகவலை லண்டனைச் சேர்ந்த பொருளாதார சேவை நிறுவனமான ஐ.ஹெச்.எஸ் மார்க்கிட் ...

Updated On : 23 மார்ச், 2017 at 5:30 PM
பகிர்:

லண்டன்: கடந்த ஆண்டு சந்தையில் அதிக அளவு விற்பனையான ஸ்மார்ட்போன் எது என்ற தகவலை லண்டனைச் சேர்ந்த பொருளாதார சேவை நிறுவனமான ஐ.ஹெச்.எஸ் மார்க்கிட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

லண்டனைச் சேர்ந்த பொருளாதார சேவை நிறுவனம் ஐ.ஹெச்.எஸ் மார்க்கிட். இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் நேற்று மாலை செய்திக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள நிறுவனங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.    

இந்த அறிக்கையின்படி ஆப்பிளின் ஐபோன் 6 கடந்த ஆண்டு சந்தையில் அதிக அளவு விற்பனையான ஸ்மார்ட்போன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்த இடத்தை மற்றொரு ஆப்பிள் நிறுவன   மாடலான ஐபோன் 6+ பிடித்துள்ளது.

Advertisement

ஆப்பிளின் புதிய அறிமுகங்களான ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7+ ஆகிய இரண்டும் கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் விற்பனையி ல் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன. இது குறித்து  மார்க்கிட் நிறுவனம் கூறுகையில், 'ஆப்பிளின் மாடல்கள் போதுமான அளவு புதிய வசதிகளையும், சிறந்த செயலமைப்பையும் கொண்டுள்ளன. இதன் காரணமாகவே தொடர்ந்து அவை முதலிடத்தில் இருக்கின்றன' என்று தெரிவித்துள்ளது.

மற்றொரு முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்ஸங் தன்னுடைய நிறுவன தயாரிப்பான கேலக்சி நோட் 7 வகை போன்களை பேட்டரி குறைபாடு காரணமாக கடந்த ஆண்டில் சந்தையில் இருந்து விலக்கி கொண்டது. இதன் காரணமாக அதே கம்பெனியின் இதர தயாரிப்புகளான கேலக்சி எஸ் 7 எட்ஜ், கேலக்சி எஸ் 7 ஆகிய இரண்டும் முறையே ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளன.  

மொத்தமுள்ள 10 இடங்களில் சாம்சங் மாடல்கள் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. சீன நிறுவனமான ஒப்போ நிறுவனத்தின் மாடலொன்றும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.