உலகம்

எச்சரிக்கை.. கூகுள் ப்ளே ஸ்டோரில் உலவும் போலி வாட்ஸ்- அப்! 

DIN

சான் பிரான்சிஸ்கோ: பிரபல செய்தி பரிமாற செயலியான வாட்ஸ்- அப்பின் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போலியான அப்ளிகேஷன்கள் உலவும் தகவல் வெளியாகியுள்ளது

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் ஒரு அங்கமாக இருப்பது வாட்ஸ்-அப். இது உலகமெங்கும் அதிகமான பேரால் பயன்படுத்தப்படும் ஒரு செய்தி பரிமாற்ற செயலியாகும். நமக்கு உதவக்கூடிய செயலிகளை தரவிறக்கி பயன்படுத்த உதவும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இதுகிடைக்கிறது.

ஆனால் தற்பொழுது வாட்ஸ்- அப்பின் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போலியான அப்ளிகேஷன்கள் உலவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. “Update WhatsApp Messenger” என்ற பெயரில் அங்கு கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேரினை உருவாக்கியவர்கள் ‘WhatsApp Inc*’ என்று என்பவர்களின் பெயர் காணப்படுகிறது. இந்த ஆஃப்பானது இதுவரை 5000 பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த பெயரில் வேறொரு அப்ளிகேஷனும் உள்ளது. அது இதுவரை 10 லட்சம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இதுவரை 1 பில்லியன் மக்கள் தரவிறக்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தகவல்களை எல்லாம் வாட்ஸ் அப்பில் நிகழும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் WABetaInfo என்னும் இணையத்தளமானது தன்னுடைய டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT