உலகம்

மனை வர்த்தகத்தை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர ஆலோசிப்போம்: அருண் ஜேட்லி

DIN

மனை வர்த்தகத் துறையை (ரியல் எஸ்டேட்) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்றுள்ள அவர், அந்த நாட்டின் மாஸசூùஸட்ஸ் மாகாணம், பாஸ்டன் நகரிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களிடையே புதன்கிழமை பேசியதாவது:
இந்தியாவில் மிக அதிக அளவு வரி ஏய்ப்பு செய்வதற்கு வாய்ப்புள்ள துறை, மனை விற்பனைத் துறையாகும். மிக அதிக அளவு பணம் கைமாறகக்கூடிய அந்தத் துறை, இதுவரை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. அந்தத் துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருமாறு பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
குவாஹாத்தியில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிப்போம்.
மனை வர்த்தகத் துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு சில மாநிலங்கள் ஆதரவு தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை மூலம், மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மனை வர்த்தகத் துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால், வாடிக்கையாளர்கள் ஒரே வகையான வரியைச் செலுத்தினால் போதுமானது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை: பணி மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பொருத்தவரை, அது பொருளாதாரச் சீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கையே ஆகும். எல்லோரும் கருதுவதைப் போல கருப்புப் பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து அந்தப் பணத்தைக் கைப்பற்றுவது பணம் வாபஸ் நடவடிக்கையின் நோக்கம் அல்ல. அது நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், புழக்கத்திலிருந்த பணம் யாரிடம் இருந்தது என்ற விவரம் அரசுக்குத் தெரிய வந்துள்ளது. அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சுமார் 18 லட்சம் பேர் தங்கள் வருமானத்துக்குப் பொருந்ததாத அளவு அதிகமாக வங்கிகளில் பணம் செலுத்தியுள்ளதாக அரசு அடையாளம் கண்டுள்ளது.
மேலும், அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் வரி செலுத்துவோர் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. 
ஆனால், இத்தனை ஆண்டுகளாக அந்த விகிதத்தை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போதுதான் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் வங்கித் துறையை மறுக்கட்டமைக்கும் திட்டப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார் அவர்.
தற்போதைய நிலையில், விற்பனை நோக்கத்துக்காகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. எனினும், நிலம் மற்றும் பிற அசையாச் சொத்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT