முகப்பு
உலகம்

ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 8 செய்தியாளர்கள் உள்பட 25 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் 8 செய்தியாளர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
காபூலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைக்கும் பாதுகாப்புப் படையினர்.
பகிர்:

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் 8 செய்தியாளர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தலைநகர் காபூலின் மத்தியப் பகுதியில் திங்கள்கிழமை காலை இரண்டு ஐ.எஸ். தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர்.
இதில், 8 செய்தியாளர்கள், 4 காவலர்கள் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த செய்தியாளர்களில், ஏ.எஃப்.பி. போட்டோகிராபர் மற்றும் உள்ளூர் டிவி சேனல் ஒளிப்பதிவாளரும் அடங்குவர். 
மேலும், 45 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த தாக்குதல் நடத்தப்பட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு, காந்தஹார் மாகாணத்தில் மற்றொரு தற்கொலைத் தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தினர். இதில், 11 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களது வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆப்கன் தலைநகர் காபூலில் அமைந்துள்ள புலனாய்வு சேவை தலைமை அலுவகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் இந்த மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று அந்த வலைதள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
காபூலில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடம் ஷாஸ் தரக் பகுதியாகும். இங்குதான் நேட்டோ நாடுகளின் தலைமையகம், வெளிநாட்டு தூதரகங்கள், அலுவலகங்கள் ஆகியவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →