செய்தித் துளிகள்
அமெரிக்கா சிரியாவிலிருந்து அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தாலும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வரும் வெளியுறவுத் துறைப் பிரிவு
அமெரிக்கா சிரியாவிலிருந்து அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தாலும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வரும் வெளியுறவுத் துறைப் பிரிவு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கன் தலைநகர் காபூலில் மிகப் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதால், ராணுவ நிலைகளை விட்டு விலகியிருக்குமாறு பொதுமக்களை தலிபான் பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
Advertisement
பாகிஸ்தான்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 2015-ஆம் ஆண்டு 400 பேரை பலி கொண்ட அனல் காற்று, இந்த ஆண்டும் அந்த நகரை தாக்குதவதற்கான அபாயம் உள்ளதாக வானியல் ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காங்கோ குடியரசு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பரவி வரும் எபோலா நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த செவிலி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை
இலங்கை முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை மற்றும் புயல் காரணமாக அந்த நாட்டில் 7 பேர் உயிரிழந்தனர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீனா
சீனாவிலுள்ள அனைத்து மசூதிகளிலும் கட்டாயமாக அந்த நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்; சீன அரசியல் சாசனம், பொதுவுடைமை கொள்கைகள் ஆகியவை பயிலப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.