முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை திரையிட இடைக்கால தடை

ரம்ஜானை முன்னிட்டு பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை குறிப்பிட்ட நாட்களுக்கு திரையிட அந்நாட்டு அரசு தடைவித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:08 PM
பகிர்:

பாகிஸ்தானின் தகவல் தொலைதொடர்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில்,

"ரம்ஜானுக்கு 2 நாட்களுக்கு முன்பு முதல் விடுமுறைக்கு 2 வாரங்கள் பின்பு வரை இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. இது உள்ளூர் திரைத்துறையை பாகிஸ்தானில் ஊக்கமளித்து புதுப்பிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. 

அதனால், வெளிநாட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் இந்திய திரைப்படங்களை மேற்கண்ட நாட்களில் திரையரங்குகளில் திரையிடக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது. 

Advertisement

முன்னதாக, பாகிஸ்தானின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர், நடிகையர் இந்தியா மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களுடனான கடும் போட்டியால் தங்களது திரைப்படங்களுக்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கிறது என்று புகார் அளித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments