முகப்பு
உலகம்

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஹொக்கைடோ தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:


டோக்கியோ: ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஹொக்கைடோ தீவின் ராவுசு பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஹொக்கைடோ தீவு பகுதியில் உள்ள ராவுசு நகரங்களில் நன்கு உணரப்பட்டது. இதையடுத்து, அந்நகர குடியிருப்பு வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயந்து ஓடினர். 

ஒரு மாதத்துக்கு முன்புதான் 6.7 அலகுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு அங்கு 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் காரணமாகவே அங்கு பதற்றம் அதிகமாகவே தொற்றிக் கொண்டது. 

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர் அல்லது காயமுற்றவர் குறித்து இதுவரை தகவல் இல்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →