உலகம்

இந்திய கர்ப்பிணிக்கு துபாய் விமான நிலையத்தில் பிரசவம்

துபாய் விமான நிலையத்தில் விமான நிலைய பெண் காவல் ஆய்வாளர் உதவியோடு இந்திய கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

PTI


துபாய்: துபாய் விமான நிலையத்தில் விமான நிலைய பெண் காவல் ஆய்வாளர் உதவியோடு இந்திய கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

கலீஜ் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவலில், துபாய் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்துக்கு வந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக அவ்விடத்துக்கு வந்த பெண் காவல் ஆய்வாளர் ஹனன் ஹுசைன் மொகம்மது, கர்ப்பிணியை பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்று, சுகப் பிரசவம் பார்த்தார். பிறந்த குழந்தை மூச்சு விடாததால், தாயும், சேயும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

இந்த பணிக்காக, விமான நிலையத்தின் சார்பில் ஹனன் கௌரவிக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT