முகப்பு
உலகம்

இந்திய போர் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினோம்; ஒரு விமானி கைது: பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய போர் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:15 AM
பகிர்:


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய போர் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய போர் விமானங்கள் இரண்டை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஒன்று காஷ்மீரில் விழுந்துவிட்டது. மற்றொன்று பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் விழுந்த இந்திய விமானப் படையின் விமானி ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொரு விமானியை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை அந்நாட்டு ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. அதில் இந்திய விமானப் படையின் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியிருப்பது போன்ற விடியோக்களும் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.