லண்டன்: இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி செய்தது தொடர்பாக விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூபாய் 9,000 கோடி அளவில் கடனை பெற்றுக்கொண்டு, கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச் சென்று விட்டார்.
இந்திய அரசு சார்பில் விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரும் மனுவானது லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரை நாடு கடத்துமாறு உத்தரவிட்டது. .
இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை செவ்வாயன்று நடைபெற உள்ளது.
விஜய் மல்லையாவின் மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் அந்த தீர்ப்பு வெளியான 28 நாட்களுக்குள் அவர் நாடு கடத்தப்பட வேண்டும். அதேசமயம், அவரது மனு ஏற்கப்பட்டால் நீதிமன்றத்தில் விரிவாக விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.