முகப்பு
உலகம்

இம்ரான் கான் அமெரிக்கா பயணம்?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:23 AM
பகிர்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த மாத துவக்கத்தில் வாஷிங்டன் செல்ல இம்ரான் கான் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் அதுதொடர்பான இறுதித் திட்டம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

புதிய பாகிஸ்தான் அரசின் பிரதமரை மிக விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தார். மேலும் ஜூன் மாதம் இந்த சந்திப்பு நடத்த டிரம்ப் அழைப்பு விடுத்திருந்திருந்தார். 

ஆனால், பாகிஸ்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தால் இம்ரான் இந்த சந்திப்பை தவிர்த்துவிட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹமுத் குரேஷி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.