உலகம்

பாகிஸ்தானில் வழிபாட்டுத் தலம் அருகே குண்டுவெடிப்பு: 8 பேர் சாவு

DIN

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருவதால் லாகூரில் உள்ள பிரபலமான டேடா தர்பாரின் வெளியே புதன்கிழமை காலை குண்டுவெடித்தது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 24 பேர் பலத்த காயமடைந்தனர். உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

பாக். போலிஸ் வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டாலும், அதன் தாக்கம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் குண்டுவெடிப்பு முறை, காரணம் உள்ளிட்டவை குறித்து முழுமையான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதுகுறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, 2010-ஆம் ஆண்டு இதே இடத்தில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT