முகப்பு
உலகம்

சந்தா முறையை அறிமுகப்படுத்த டிவிட்டர் நிறுவனம் ஆலோசனை

சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் பயனாளர்களுக்கு சிறப்பு வசதிகளை பயன்படுத்த சந்தா முறையை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
சந்தா முறையை அறிமுகப்படுத்தும் டிவிட்டர்
பகிர்:

சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் பயனாளர்களுக்கு சிறப்பு வசதிகளை பயன்படுத்த சந்தா முறையை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் டிவிட்டர் செயலி பயன்பாட்டில் உள்ளது. சாதாரண மக்கள் தொடங்கி பிரபலமான நட்சத்திரங்கள் வரை டிவிட்டரில் பயனாளர்களாக உள்ளனர்.இந்நிலையில் டிவிட்டரில் கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அனுப்பிய செய்தியை திரும்பப்பெறுதல், வண்ணங்களை மாற்றிக் கொள்தல், அதிக அளவு கொண்ட வீடியோ கோப்புகளை பதிவிடுவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கூடுதல் வசதிகளை சந்தா செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் வழங்கும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 23 அன்று, தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி முதலீட்டாளர்களிடம், விளம்பர வருவாய் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ட்விட்டர் சந்தா விருப்பங்களைக் குறித்து ஆராய்வதாக தெரிவித்திருந்தது குரிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →