முகப்பு
உலகம்

நியூசிலாந்தில் மேலும் நால்வருக்கு கரோனா தொற்று

நியூசிலாந்தில் கடந்த 102 நாள்களாக கரோனா தொற்று பதிவாகாத நிலையில், தற்போது மேலும் நால்வருக்குப் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
New Zealand records 4 new COVID-19 cases after 102 days of no local transmission
பகிர்:

நியூசிலாந்தில் கடந்த 102 நாள்களாக கரோனா தொற்று பதிவாகாத நிலையில், தற்போது மேலும் நால்வருக்குப் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் கூறுகையில், 

நியூசிலாந்தில் கடந்த 102 நாள்களாக கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.  முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்த நாட்டு மக்கள் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், 50 வயதுடைய நபர் ஒருவருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து, அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சோதனை செய்யப்பட்டதில், மேலும் மூவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். 

மேலும், பிற இடங்களில் வசிப்பவர்கள் நகரத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.