தாய்லாந்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக் கோரி தலைநகர் பாங்காக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக் கோரி தலைநகர் பாங்காக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாய்லாந்தில் முடியாட்சியை எதிர்த்தும், எதிர்க்கட்சிகளின் மீதான் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரியும் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஒரு மாதமாக தினசரி நடைபெறும் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ள மாணவர் குழுக்களுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டதிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் இராணுவத் தலைவரான பிரயுத் சான்-ஓச்சா பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் தாய்லாந்தில் முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவரக் கோரியும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பட்டது.
மாணவர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தில் வயது மூத்தவர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக நடைபெற்ற போராட்டங்களில் கட்டுப்பாடுகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் மூன்று பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 மாணவத் தலைவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.