முகப்பு
கோப்புப்படம்
உலகம்

உ.பி.: வேலைவாய்ப்பின்மையைக் கண்டித்து சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசத்தில் வேலைவாப்பின்மையைக் கண்டித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகம்

உ.பி.: வேலைவாய்ப்பின்மையைக் கண்டித்து சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசத்தில் வேலைவாப்பின்மையைக் கண்டித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
கோப்புப்படம்
பகிர்:

லக்னெள: உத்தரப்பிரதேசத்தில் வேலைவாப்பின்மையைக் கண்டித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக இன்று முதல் மூன்று நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் அனைத்து கட்சியினர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதை கண்டித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைகளில் பதாகைகளை ஏந்தி இளைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது. 

மேலும் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததுமுதல் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →