கராச்சியில் கனமழைக்கு 5 பேர் பலி
கராச்சியில் பெய்த கன மழைக்கு 5 பேர் பலியானார்கள்.
கராச்சியில் பெய்த கன மழைக்கு 5 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சுர்ஜனி டவுன், வடக்கு கராச்சி, ஓரங்கி டவுன் உள்ளிட்ட இடங்களில் இடுப்பு அளவு வரை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.
கராச்சியில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 5 பேர் பலியானார்கள். அந்த வகையில் மீமன் கோத்தில் இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி பலியாகினர். மற்ற 2 இளைஞர்கள் மின்சாரம் பாய்ந்தும், ஒருவர் லியாரி ஆற்றில் மூழ்கியும் இறந்தனர்.
இதனிடையே சிந்து உள்பட கராச்சியில் வரும் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.