முகப்பு
உலகம்

பிரமிடில் விதிகளை மீறி புகைப்படம்: இருவருக்கு தடுப்புக்காவல்

விதிகளை மீறி எகிப்து பிரமிடு முன் புகைப்படம் எடுத்ததாக புகைப்படக் கலைஞரை அந்நாட்டு காவல்துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
எகிப்தில் உள்ள பிரமிடு
பகிர்:

விதிகளை மீறி எகிப்து பிரமிடு முன் புகைப்படம் எடுத்ததாக புகைப்படக் கலைஞரை அந்நாட்டு காவல்துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள பிரமிடு. பண்டைய கால நகரமான இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அப்போது பிரமிடு முன் புகைப்படம் எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல நடனக் கலைஞர் சல்மா அல் சிமி பண்டைய எகிப்து உடைகளுடன் பிரமிடு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தொல்பொருள் பகுதியில் விதிகளை மீறி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இதனால் அந்தப் புகைப்படங்களை சல்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். எனினும் புகைப்படங்களைப் பதிவிட்ட சல்மா அல் சிமி மற்றும் புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டனர். இது சமூக ஊடகங்களில் விவாதமானது.

பின் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் தெற்கு கிசா நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.