பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி: 5 பேர் கைது
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தகவல் கிடைத்ததையடுத்து லாகூரில் காவல்துறையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் லாகூரில் உள்ள சிவில் செயலகம் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
தேடுதல்வேட்டையின்போது, பயங்கரவாதிகளிடமிருந்து வெடிபொருள், ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.