பாகிஸ்தானில் புதிதாக 3,138 பேருக்குத் தொற்று; மேலும் 56 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,138 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஒரேநாளில் 56 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,138 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஒரேநாளில் 56 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால், பாகிஸ்தானில் மொத்த பாதிப்பு 4,29,280 ஆகவும் மொத்த உயிரிழப்பு 8,603 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3,74,301 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 46,376 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,575 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
Advertisement
மாகாணவாரியாக பாதிப்பு
சிந்து - 189,687, பஞ்சாப் - 125,250, கைபர்-பக்துன்க்வா- 50,762, இஸ்லாமாபாத் - 33,695, பலுசிஸ்தான்- 17,604, கில்கித்-பல்திஸ்தான்- 4,765 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 7,517 பேர்.