உலகளவில் கரோனா பாதிப்பு 7.26 கோடியைத் தாண்டியது
உலகளவில் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 7.2 கோடி போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 7.2 கோடி போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் ஒட்டுமொத்தமாக 7,26,47,104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் இதுவரை 16,18,913 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனாவிலிருந்து 5.08 கோடி பேர் குணமடைந்துள்ளனர். சுமாா் 2,01,62,988 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,178 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Advertisement
உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,67,37,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,06,459 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 9,72,4,439 பேர் குணமடைந்துள்ளனர், 6,70,6,369 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 27,611 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில்இதுவரை 98,84,716 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,43,393 ஆக உள்ளது. இதுவரை 93,88,1598 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.