உலகம்

ஜிமெயில், யுடியூப் உள்ளிட்ட கூகுள் செயலிகள் முடங்கின

DIN

ஜிமெயில், யுடியூப் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் செயலிகள் முடங்கியுள்ளன. 

கூகுள் பிளே ஸ்டார், ஜிமெயில், யுடியூப், கூகுள் பே, கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட கூகுள் செயலிகள் கடந்த சில நிமிடங்களாக செயல்படவில்லை. கூகுளின் சில வலைத்தளங்களும் முடங்கியுள்ளன. 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூகுள் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து யுடியூப் நிறுவனம், 'யுடியூப் செயலியில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதை அறிவோம். இதுகுறித்து எங்களது குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் பிரச்னை குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. 

சில நிமிடங்கள் கூகுள் சேவைகள் முடங்கியிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT