ஆப்கன் தலைநகரில் கார் குண்டு தாக்குதல்: 9 பேர் பலி
ஆப்கனில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள்.
ஆப்கனில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள்.
தலைநகர் காபூலில் உள்ள ஸ்பின் காலே ஸ்கொயர் பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொருப்பேற்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி கான் முகமது வர்தக்கின் வாகனத்தை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தாக்குதலில் வர்தக் தப்பினார்.
ஆப்கனில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அமைதி ஒப்பந்தங்களை மீறியும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.