முகப்பு
உலகம்

கனடாவின் ஓன்டாரியோவில் டிச.26 முதல் மீண்டும் பொதுமுடக்கம்

கரோனா இரண்டாம் அலை காரணமாக கனடா நாட்டின் ஓன்டாரியோ மாகாணத்தில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் டிச.26 முதல் மீண்டும் பொதுமுடக்கம்
பகிர்:

கரோனா இரண்டாம் அலை காரணமாக கனடா நாட்டின் ஓன்டாரியோ மாகாணத்தில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல நாடுகளில் கரோனா இரண்டாம் அலை தாக்கம் இருப்பதால் தற்போதும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை காரணமாக கனடா நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான ஓன்டாரியோ மாகாணத்தில் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 23ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் ஏற்கெனவே உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய புதிய அறிவிப்பின்படி பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களும் மூடப்பட உள்ளன.

மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆலோசிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →