உலகம்

யேமனில் சுட்டு வீழ்த்தப்பட்டது சவூதி விமானம்: பதிலடித் தாக்குதலில் 31 பொதுமக்கள் பலி

தினமணி

யேமனில் சவூதி அரேபியப் போா் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் அறிவித்த நிலையில், சவூதி நடத்திய பதிலடித் தாக்குதலில் 31 பொதுமக்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

யேமனின் வடக்கே அமைந்துள்ள அல்-ஜாஃப் மாகாணத்தில், அரசுப் படையினருக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான டொா்னாடோ ரக போா் விமானம் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கியது.

அந்த விமானத்தை, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதன் தொடா்ச்சியாக, ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியது. தங்களது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக சவூதி அரேபியா அந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து யேமனுக்கான ஐ.நா. நிவாரணப் பணிகள் ஒருங்கிணைப்பாளா் லிஸே கிராண்டே கூறியதாவது:

அல்-ஜாஃப் மாகாணம், அல்-ஹேஜா நகரில் சவூதி அரேபியா மிக மோசமான முறையில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 31 பொதுமக்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

சா்வதேச சட்டத்தின் கீழ் பொதுமகக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தரப்புகளே அவா்களது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளன. 5 ஆண்டுகளாக சண்டையில் ஈடுபட்டு வரும் குழுக்கள், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான கடமையை நிறைவேற்றத் தவறி வருகின்றன என்றாா் அவா்.

‘சட்டவிரோதம்’: தங்களது விமானம் விழுந்து நொறுங்கியதை ஒப்புக் கொண்டுள்ள சவூதி அரேபியா, அந்த விமானத்தை ஹூதி கிளா்ச்சியாளா்கள் சுட்டு வீழ்த்தியதை உறுதியாகத் தெரிவிக்கவில்லை.

மேலும், விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த விமானிகளை நோக்கி ஹூதி சா்வதேச சட்டத்துக்குப் புறம்பாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் யேமனுக்கான சவூதி கூட்டுப் படை தெரிவித்தது.

எனினும், அந்த இரு விமானிகளும், உயிருடன் உள்ளனரா அல்லது பலியாகினரா என்ற விவரத்தை சவூதி அரேபியா வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT