உலகம்

உக்ரைன் விமான விபத்துக்கு ஈரான் தாக்குதல் காரணம்: ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைன் விமான விபத்துக்கு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தான் காரணம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். 

DIN

ஈரானில் புதன்கிழமை விபத்துக்குள்ளான உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். இதில் 63 பேர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், உக்ரைன் விமான விபத்துக்கு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தான் காரணம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கானோர் டோரான்டோவில் திரண்டனர்.

இதையடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், உக்ரைனில் நடந்த விமான விபத்துக்கு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தான் காரணம் என பல்வேறு உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளது. இருப்பினும் எதிர்பாராமலும் பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். 

முன்னதாக, ஈரானில் புதன்கிழமை விபத்துக்குள்ளான உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னரே, அதில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், மீண்டும் அந்த நிலையத்துக்கு விமானத்தைக் கொண்டு வர விமானிகள் முயன்றதாகவும், அதற்குள் அது விழுந்து நொறுங்கியதாகவும் ஈரான் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT