அமெரிக்க ஊடகங்களுக்கு சீனா பதிலடி
அமெரிக்காவிலுள்ள சீன ஊடகங்களின் நிறுவனங்களை அமெரிக்கா ஆதாரமின்றி அடக்கிவைப்பது குறித்து..
அமெரிக்காவிலுள்ள சீன ஊடகங்களின் நிறுவனங்களை அமெரிக்கா ஆதாரமின்றி அடக்கிவைப்பது குறித்து, சீனாவிலுள்ள 4 அமெரிக்க ஊடகங்களின் நிறுவனங்களுக்கு சீனா தக்க பதிலடி கொடுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லிஜியன் ஜுலை முதல் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஏபி, யூபிஐ, சிபிஎஸ், என்பிஆர் ஆகிய 4 ஊடக நிறுவனங்கள் வரும் 7 நாட்களுக்குள் சீனாவிலுள்ள தங்களது பணியாளர்கள், நிதி விவகாரம், அலுவல், நிலையான சொத்துகள் உள்ளிட்டவை பற்றிய எழுத்து மூல ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், சீனாவின் இந்நடவடிக்கை நியாயமான தற்காப்பு ஆகும். பனிப்போர் மற்றும் கருத்தியல் பாகுபாட்டின் அடிப்படையில் செயல்படும் அமெரிக்கா, சீன ஊடகங்களின் செல்வாக்கு மற்றும் பிம்பத்தைக் கடுமையாகச் சீர்குலைத்து, இருநாடுகளிடையே இயல்பான பரிமாற்றத்தில் தலையீடு செய்து, தனது போலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா உடனடியாக தவறைத் திருத்தி, சீன ஊடகங்களின் மீதான நியாயமற்ற தடை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்