முகப்பு
உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கரோனா

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
corona test
பகிர்:

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 

வாஷிங்டன் வெளியிட்ட தகவலின் படி, கலிபோர்னியாவில் 9,740 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,788 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 8,00,000-க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 2,683,894 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1,28,044 பேர் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றிலிருந்து 7,29,994 பேர் இதுவரை மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.