முகப்பு
உலகம்

ரஷியாவில் மேலும் 6,562 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 7 லட்சத்தைக் கடந்தது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,562 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,00,792 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:54 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,562 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,00,792 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. முன்னதாக அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில், இந்தியா முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஒரேநாளில் 6,562 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 7,00,792 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதித்தோரில் 1,812 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 173 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 10,667 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது வரை 4,72,511 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.