சீனாவின் தடுப்பூசி உலகளாவிய பொது பொருளாகிவிடும்
சீனா ஆராய்ந்து தயாரிக்கும் கரோனா தடுப்பூசி உலகளாவிய பொதுப் பொருளாக வழங்கப்படும் என்று 73ஆவது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் வாக்குறுதி அளித்துள்ளார்.
சீனா ஆராய்ந்து தயாரிக்கும் கரோனா தடுப்பூசி உலகளாவிய பொதுப் பொருளாக வழங்கப்படும் என்று 73ஆவது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆனால், அமெரிக்க சட்டத் துறை அமைச்சர் வியாழக்கிழமை உரை நிகழ்த்திய போது, சீனாவைச் சேர்ந்த நபர் கள்ளத்தனமாக அமெரிக்க இணைய இணைப்புகளில் நுழைந்து கரோனா வைரஸ் தடுப்பூசித் தொடர்பான தகவல்களைத் திருடிக் கொண்டதாகக் கூறினார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் கூறுகையில், கரோனா தடுப்பூசி ஆய்வில் சீனா உலக முன்னணியில் உள்ளது. அமெரிக்காவின் தரவுகளைத் திருடத் தேவையில்லை என்றும், குற்றஞ்சாட்டினால் முதலில் சான்றுகளை வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்