உலகம்

மெக்ஸிகோ: சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்: அதிபா் உறுதி

மெக்ஸிகோவில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபா் ஆபிரடாா் தெரிவித்துள்ளாா்.

DIN

மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபா் ஆபிரடாா் தெரிவித்துள்ளாா்.

மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் அந்நாட்டில் 5,311 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் 296 போ் உயிரிழந்தனா்.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,44,224-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு 39,184-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அதிபா் ஆபிரடாா் வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மருத்துவா்களுக்கும் சுகாதார பணியாளா்களுக்கும் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும். அதற்கான உதவித்தொகையை அரசே வழங்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT