பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,487 பேருக்கு கரோனா
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,487 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,71,886 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,487 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,71,886 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்ட 2,36,596 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளதாக தேசி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில், 1,16,80 சிந்து, பஞ்சாபில் 91,691, கைபர்-பக்துன்க்வாவில் 33,071, இஸ்லாமாபாத்தில் 14,821, பலுசிஸ்தானில் 11,550, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,012 மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் 1,942 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் ஒரே நாளில் 24 பேர் பலியாகியுள்ள நிலையில் இதுவரை 5,787 பேர் வைரஸ் காரணமாக இறந்துள்ளனர். 1,294 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தற்போது 29,503 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 23,630 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் இதுவரை மொத்தம் 1,844,926 சோதனைகள் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.