பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 25 லட்சத்தை நெருங்குகிறது!
பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆனதை அடுத்து, மொத்த பாதிப்பு 24,42,375 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆனதை அடுத்து, மொத்த பாதிப்பு 24,42,375 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சுமார் 24 லட்சம் பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரேசிலில் புதிதாக 23,284 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 24,42,375 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் பலியானதை அடுத்து, மொத்த உயிரிழப்பு 87,618 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், பிரேசிலின் முக்கிய நகரமான சா பவுலோவில் இதுவரை 4,87,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 21,676 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று ரியோ டி ஜெனிராவில் 1,57,834 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 12,876 பேர் உயிரிழந்துள்ளனர்.