புதிய கரோனா பாதிப்புகளால் அச்சம்: பெய்ஜிங்கின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு
இறைச்சி சந்தையோடு தொடர்புடைய பலருக்கு கரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அச்சம் காரணமாக தெற்கு பெய்ஜிங்கில் உள்ள 11 குடியிருப்புப் பகுதிகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி சந்தையோடு தொடர்புடைய பலருக்கு கரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அச்சம் காரணமாக தெற்கு பெய்ஜிங்கில் உள்ள 11 குடியிருப்புப் பகுதிகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சின்ஃபடி இறைச்சிக் கடையோடு தொடர்புடைய 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சந்தைப் பகுதிக்கு அருகே உள்ள பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
சீனாவில் சனிக்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யட்டதில், 6 பேர் உள்ளூர் மக்கள் என்று தெரிய வந்துள்ளது. இதனால், மீண்டும் கரோனா தொற்றுப் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து திரும்புவோருக்கு மட்டுமே கரோனா தொற்று பாதிப்புக் கண்டறியப்பட்டு வந்த நிலையில் தற்போது உள்ளூர் மக்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதும், அவர்களுக்கு எப்படி தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், துவக்கப் பள்ளிகளை திறக்கலாம் என்ற பெய்ஜிங் அதிகாரிகளின் முடிவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.