உலகம்

சீனாவில் டேங்கர் லாரி வெடித்து விபத்து; 18 பேர் பலி

DIN

சீனாவில் ஆயில் கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று வெடித்துச் சிதறியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  

சீனாவின் ஸெஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோவ் எக்ஸ்பிரஸ் சாலையில் ஆயில் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்துச் சிதறியது. மேலும் டேங்கர் லாரி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஒர்க்ஸ்ஷாப் மீது மோதியது. இதனால் அப்பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டது. 

தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. 

இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 166 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT