உலகம்

பெய்ஜிங்கில் பரவும் கரோனா வைரஸுக்கும் ஐரோப்பாவில் உள்ள வைரஸுக்கும் இடையே நெருக்கிய மரபணு தொடர்பு

DIN

பெய்ஜிங்கில் பரவும் புதிய கரோனா ரக வைரஸுக்கும், ஐரோப்பாவில் உள்ள கரோனா வைரஸுக்கும் இடையே நெருக்கமான மரபணு தொடர்பு உள்ளது  என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டங்களின் தொழில்நுட்ப இயக்குநர் மரியா வான் கெர்ஹோவ் வெள்ளிக்கிழமை 19ஆம் நாள் தெரிவித்தார்.

வெவ்வேறு மரபணுக்களைக் கொண்ட வைரஸ் பரவி வரும் நிலையில், பெய்ஜிங்கில் பரவும் வைரஸ் ஐரோப்பியாவில் இருந்து வந்துள்ளது  என்பதை உறுதிச் செய்ய முடியாது. பிற பகுதியில் இருந்து பெய்ஜிங்கிற்கு பரவியிருக்க சாத்தியம் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டங்களின் தலைமை இயக்குநர் மைக்கேல் ரையான் குறிப்பிட்டார்.

இப்போது,  வைரஸ்  பரவும் காலம் மற்றும் பரவும் சங்கிலி ஆகிய விவரங்களை உறுதிப்படுத்துவது அவசியமானது. இது குறித்து பெய்ஜிங்கில் அதிக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT