உலகம்

டிரம்புக்கும் பாம்பியோவுக்கும் கருத்து இடைவெளி: பொல்டன்

DIN

ஜுன் 17ஆம் நாள் அமெரிக்காவைச் சேர்ந்த பல முக்கிய நாளேடுகளில் அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்  ஜோன் பொல்டனின் புதிய புத்தகத்தின் சில அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப், தனது அரசியல் பேராசையை அமெரிக்காவின் நீதி மற்றும் வெளியுறவு கொள்கைகளுடன் ஒன்றாக சேர்த்து செயல்பட்டார் என்று பொல்டன் இப்புத்தகத்தில் குறிப்பிட்டார். மேலும், டிரம்புக்கு ஆதரவான தனது விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டியுள்ள வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, மறைமுகத்தில் டிரம்புக்கு எதிராக அவதூறு பரப்பி, கொரிய பிரச்சினை குறித்து டிரம்பின் செயல்களுக்கு சந்தேகம் எழுப்பி இருந்தார் என்றும் பொல்டன் அம்பலப்படுத்தினார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோஸ்ஃப் பைடனின் மீது விசாரணை செய்ய டிரம்ப் உக்ரைனை நிர்ப்பந்தித்து வருவதையும் பொல்டன் உறுதிப்படுத்தினார்.  புவி அரசியல் பற்றிய டிரம்பின் அறிவு குறைவு, சகப் பணியாளர்களுடனான மோசமான உறவு ஆகியவை கவலைக்குரியவை என்று பொல்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இப்புத்தகத்தில் இரகசிய தகவல்கள் இடம்பெறுள்ள காரணத்தால், பொல்டன் மீது வழக்கு தொடுக்குமா குறித்து அமெரிக்கக் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் முடிவு எடுக்கின்றனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT