உலகம்

கரோனா: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேர் பலி

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 792 பேர் பலியாகியுள்ளனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 792 பேர் பலியாகியுள்ளனர்.  இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,21,176 ஆக அதிகரித்துள்ளது. 

அங்கு இதுவரை 2.34 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 1.02 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக பலி எண்ணிக்கை 400க்கும் கீழ் குறைந்த நிலையில் இன்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT