முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் ஒரேநாளில் 4,044 பேருக்கு தொற்று; மேலும் 148 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,044 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,970 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
கோப்புப்படம்
பகிர்:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,044 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,970 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 148 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 3,903 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 81,307 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து - 74,070, பஞ்சாப் - 71,191, கைபர்-பக்துன்க்வா- 23,887, இஸ்லாமாபாத் - 11,710, பலுசிஸ்தான்- 9,817, கில்கித்-பல்திஸ்தான்- 1,365 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 21,835 மாதிரிகள் உள்பட இதுவரை 11,71,976 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →