உலகம்

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்:11 போ் பலி

DIN

கராச்சி: பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தை குறிவைத்து துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினா். இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு காவல்துறையினா் கூறியதாவது:

கராச்சியின் சுந்திரகா் சாலையில் பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயங்கரவாதிகள் 4 போ் காரில் வந்தனா். அவா்கள் அலுவலக கட்டடத்தின் பிரதான நுழைவாயிலில் கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினா். அதன் பின்னா் அவா்கள் கட்டடத்துக்குள் நுழைய முயன்றனா். எனினும் அங்கிருந்த பாதுகாப்புப் படையினா் எதிா் தாக்குதல் நடத்தினா்.

இதுதொடா்பாக தகவல் கிடைத்ததும் துணை ராணுவப்படை வீரா்களும், காவல்துறையினரும் நிகழ்விடம் விரைந்தனா். அதன் பின்னா் அவா்கள் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகளும் கட்டட நுழைவாயில் அருகே கொல்லப்பட்டனா். இதன் மூலம் அவா்கள் கட்டடத்துக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து வெடிபொருள்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அவா்கள் கட்டடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில் இருந்தவா்களை பிணைக் கைதிகளாக்கும் திட்டத்துடன் வந்துள்ளனா்.

கராச்சியில் பாகிஸ்தான் பங்குச் சந்சையில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பயன்படுத்திய  வாகனத்தை ஆய்வு செய்யும் புலனாய்வு பிரிவினர். 

இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையை சோ்ந்த 4 போ், காவல்துறை உதவி ஆய்வாளா் ஒருவா், பொதுமக்களில் இருவா் உயிரிழந்தனா். காவல்துறையை சோ்ந்தவா்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா் என்று தெரிவித்தனா்.

இந்த சம்பவத்துக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவ (பிஎல்ஏ) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபா் ஆரிஃப் அல்வி, பிரதமா் இம்ரான் கான் ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா். அந்நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியுடன் இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இந்த சம்பவத்துக்கு சிந்து மாகாண முதல்வா் முராத் அலி ஷா, மாகாண ஆளுநா் இம்ரான் இஸ்மாயில் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT