முகப்பு
உலகம்

கரோனா வைரஸ் தாக்கம்: ஈரானில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. 978 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:


ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. 978 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ், நேற்று பல நகரங்களில் புதிதாக பலருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மட்டும் 11 பேர் உயிரிழந்ததாகவும், அன்றைய தினம் 385 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நகரங்களுக்கு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.  சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.  உலகம் முழுவதும் 86 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தெலங்கானாவிலும் தில்லியிலும் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.