வறுமை ஒழிப்புப் பணியின் முடிவு, புதியதொரு துவக்கப்புள்ளி: ஷிச்சின்பிங்
வறுமை ஒழிப்புப் பணியில் வெற்றி பெறுவதற்கான கலந்துரையாடல் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
வறுமை ஒழிப்புப் பணியில் வெற்றி பெறுவதற்கான கலந்துரையாடல் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்திய போது, 2020ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் வறிய மக்கள் அனைவரையும் வறுமையிலிருந்து விடுபடச் செய்யும் பணியை நிறைவேற்றுவது, தேசிய மக்களுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அளித்த முக்கிய வாக்குறுதி ஆகும். இது திட்டப்படி நனவாக்கப்பட வேண்டும். புதிய ரக கரோனா வைரஸ் பரவலின் பாதிப்பைச் சமாளித்து, வறுமை ஒழிப்புப் பணியில் பன்முக வெற்றியைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நடப்புக் கூட்டம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின் வறுமை ஒழிப்புப் பணி தொடர்பாக மிகப்பெரிய அளவில் நடைபெற்ற கூட்டமாகும். 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, சீனாவில் வறுமை நிலவிய விகிதம், 10.2 விழுக்காட்டிலிருந்து 0.6 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. பிராந்திய அளவிலான வறுமைப் பிரச்சினை அடிப்படையில் தீர்க்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புத் துறையில் சீனா பெற்றுள்ள சாதனைகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மற்றும் சோஷலிச அமைப்பு முறையின் மேம்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.
ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், வறுமை ஒழிப்பு இலக்கின் நனவாக்கத்தை உத்தரவாதம் செய்யும் அதேவேளை, சோதனைப் பணியையும் கண்டிப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தவிரவும், வறுமை ஒழிப்பு நனவாக்கம் என்பது, முற்றுப்புள்ளி என்று கருதக் கூடாது. மாறாக, அது புதிய வாழ்க்கை மற்றும் முயற்சிக்கான துவக்கப் புள்ளியாகும். வறுமை ஒழிப்புப் பணியை கிராமப்புற வளர்ச்சிக்கு புதிய உயிராற்றல் ஊட்டும் பணியுடன் இணைத்து, பொது செழுமையின் நனவாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்