முகப்பு
உலகம்

உலகளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியது

உலகளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டிவிட்டது. புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,03,500 ஆக உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

உலகளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டிவிட்டது. புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,03,500 ஆக உள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கரோனா (கொவைட் 19) நோய்த் தொற்று உலகம் முழுவதும் 213 நாடுகளில் பரவியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ரஷியா என வளர்ந்த நாடுகளே கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 50 லட்சத்தை எட்டியுள்ளது.

இதன்படி அந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50.03 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு இதுவரை 3,25,223 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,71,709 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது. 

அதேபோல் ரஷ்யாவில் 3,08,705, ஸ்பெயினில் 2,78,803, பிரிட்டனில் 2,48,818, பிரேசிலில் 2,71,885, இத்தாலியில் 2,26,69, பிரான்சில் 1,80,809, ஜெர்மனியில் 1,77,842 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →