கரோனா தாக்கத்தின் முதல் அலையே ஓயவில்லை; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், கரோனா தாக்கத்தின் முதல் அலையே இன்னும் ஓயவில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
பாங்காக்: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், கரோனா தாக்கத்தின் முதல் அலையே இன்னும் ஓயவில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தற்போது நாம் இரண்டாவது அலையில் இல்லை. உலகம் முழுவதும் கரோனாவின் முதல் அலையின் நடுமத்தியப் பகுதியில்தான் இருக்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குநர் டாக்டர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்கா, தெற்காசிய நாடுகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டியிருக்கும் அவர், உலகம் முழுவதுமே, கரோனா தொற்று வேகமாகப் பரவும் ஒரு அபாயக் கட்டத்திலேயே இப்போதும் நாம் இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தினந்தோறும் ஆறு ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.40 லட்சத்தை எட்டிவிட்டது.
நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளும் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.