முகப்பு
உலகம்

அமெரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 5 நவம்பர், 2020 at 1:12 PM
Single-day Covid-19 cases in US top 100,000
பகிர்:

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,02,591 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

நாட்டில் கரோனா பரவத்தொடங்கியதில் இருந்து, முதல்முறையாகப் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது அமெரிக்க மக்களிடையே பெருமளவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

புதன்கிழமை நிலவரப்படி அமெரிக்க நாட்டில்  கரோனா பாதிப்பு மொத்தம் 9,47,7,709 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொலராடோ, இடாஹோ, இந்தியானா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, ரோட் தீவு, வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் உள்பட 34 மாநிலங்களில் தினசரி பாதிப்புகள் அதிகரித்துள்ளது. 

மேலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,33,651 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,100 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவின் பொதுத்தேர்தல், கரோனா தொற்று அதிகமாவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.