முகப்பு
ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்
உலகம்

வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்: ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெறுவோம்  என்று  முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.  

உலகம்

வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்: ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெறுவோம்  என்று  முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்
பகிர்:

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் வெற்றி பெறுவோம்  என்று  முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்காவில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நான்காவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இதனிடையே பெரும்பாலான மாகாணங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், அதிபர் தேர்தல் போட்டியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார். 

ஆட்சியைப் பிடிக்க தேர்தல் அவையில் 270 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், 300 இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதுவரை 74 மில்லியன் வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இந்த அளவிலான வாக்குகளை எந்த வேட்பாளரும் பெற்றதில்லை என்றும் குறிப்பிட்டார்.

பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பிடனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்தில் இதுவரை எண்ணப்பட்ட 9,288 நேரடி வாக்குகளில் ஜோ பிடன் 7,300 வாக்குகளையும், அதிபர் டிரம்ப் 1,875 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இனி எண்ணப்படும் தபால் வாக்குகளின் அடிப்படையில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாகவும், பாதுகாப்புத் தன்மையுடனும் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்குப் பெட்டிகளுக்கு பல்வேறு படிநிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையால் மறு வாக்கு எண்ணிக்கை முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
முழு கட்டுரையைப் படிக்க →