முகப்பு
அமெரிக்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: துப்பாக்கியுடன் வலம் வந்த நபர் கைது
உலகம்

அமெரிக்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: துப்பாக்கியுடன் வலம் வந்த நபர் கைது

அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தின் அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
அமெரிக்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: துப்பாக்கியுடன் வலம் வந்த நபர் கைது
பகிர்:

அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தின் அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வருவதை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அருகே துப்பாக்கியுடன் வலம்வந்த நபரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.

வர்ஜீனியா பகுதியை சேர்ந்த அந்த நபருக்கு சொந்தமான வாகனத்தில் ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் காவலர்கள் கைப்பற்றினர். 

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையை வர்ஜீனியா அரசு அவருக்கு வழங்கவில்லை என்பது தெரியவந்தது. 

அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →